தமிழ் அரதப்பழசு யின் அர்த்தம்

அரதப்பழசு

பெயர்ச்சொல்-ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு நெடுங்காலமாக அல்லது தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால் பழையதாகிப்போனது.

    ‘அந்த அரதப் பழசான சட்டையையா கல்யாணத்திற்குப் போட்டுக்கொண்டு வரப்போகிறாய்?’
    ‘இந்த வீட்டில் இருக்கும் நாற்காலிகள் எல்லாம் அரதப்பழசு’
    ‘அரதப்பழசான கருத்துகளை உதறிவிட்டுப் புதிதாக ஏதாவது சிந்திக்கக் கூடாதா?’