தமிழ் அரற்று யின் அர்த்தம்

அரற்று

வினைச்சொல்அரற்ற, அரற்றி

 • 1

  (துக்கம் தாங்காமல்) புலம்பி அழுதல்.

  ‘அம்மா இறந்த துக்கத்தால் அரற்றியவண்ணம் இருந்தான்’

 • 2

  (மனக்குறைகளைக் கூறி) வருத்தப்படுதல்.

  ‘ஆண்டவன் முன் தன் குறைகளைச் சொல்லி அரற்றிய பிறகுதான் அவளது மனம் ஓரளவு ஆறுதல் அடைந்தது’

 • 3

  (வலியால்) முனகுதல்; (தூக்கம், காய்ச்சல் முதலிய நிலைகளில்) உளறுதல்.