தமிழ் அரவணைப்பு யின் அர்த்தம்

அரவணைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    பாதுகாப்பு; ஆதரவு.

    ‘தந்தை இறந்துவிட்டதால் தாயின் அரவணைப்பிலேயே வளர்ந்தவன்’
    ‘எவருடைய அரவணைப்புமின்றி இருக்கிற நோயாளிகளுக்கு அமைதியும் ஆறுதலும் அளிக்கவே அந்த இல்லத்தை அன்னை தெரசா தோற்றுவித்தார்’
    ‘அரசின் முழு அரவணைப்பு இருந்திருந்தால் நாட்டார் கலைகள் பல பிழைத்திருக்கும்’