வினைச்சொல்
- 1
(காய்கறி, பழம் போன்றவற்றை) சிறுசிறு துண்டுகளாக நறுக்குதல்.
‘அரிந்து வைத்திருந்த மாம்பழத் துண்டுகளை வாயில் போட்டுக்கொண்டான்’‘கீரையை ஆய்ந்து அரிந்து வை’ - 2
இலங்கைத் தமிழ் வழக்கு (மரம்) வெட்டுதல்; அறுத்தல்.
‘கள்ள மரம் அரிந்து விற்றுதான் காசு சேர்த்தார்’‘வீடு கட்ட என்று சொல்லி பத்துப் பதினைந்து மரங்கள் அரிந்து கொண்டுவந்தார்’‘அவர் எப்போதும் ஆள் வைத்துதான் மரம் அரிவார்’ - 3
இலங்கைத் தமிழ் வழக்கு (செங்கல், ஓடு போன்றவற்றை) அறுத்தல்.
‘ஒழுங்கான அச்சுக்கட்டையைக் கொண்டுவந்து கல்லை அரி’
வினைச்சொல்
- 1
(புழு, கறையான் முதலியன) சிறிதுசிறிதாகக் கடித்து அல்லது குடைந்து சேதப்படுத்துதல்.
‘புழு அரித்த கத்தரிக்காய்’‘இரும்பைக் கறையான் அரிக்குமா?’ - 2
(நீர், காற்று, அமிலம் முதலியன ஒரு பொருளைச் சிறிதுசிறிதாக) கரையும்படி செய்தல்.
‘மழை நீர் கரையை அரிக்காமல் மரங்களின் வேர்கள் தடுக்கின்றன’‘பாறைகளைக்கூடக் கடல் அரித்துவிடுகிறது’ - 3
(கவலை, துக்கம்) வருத்துதல்.
‘பணக் கவலை மனத்தை அரித்துக்கொண்டிருந்தது’ - 4
(ஒன்றைக் கேட்டு) விடாமல் தொல்லை தருதல்.
‘கடன் கேட்டு அரிக்கிறான்’ - 5
(தானியங்களை நீரில் போட்டு) களைதல்.
- 6
(சல்லடை, முறம் போன்றவற்றைப் பயன்படுத்தி) பிரித்தல்; தனித்து எடுத்தல்.
‘இந்த அரிசியைக் கொஞ்சம் அரித்துக் கொடு’உரு வழக்கு ‘ஆற்றை அரித்துப் பார்த்துவிட்டோம். ஆள் அகப்படவில்லை’ - 7
வட்டார வழக்கு (வைக்கோல், சருகு போன்றவற்றைக் கையால்) கூட்டி ஒன்று சேர்த்தல்.
‘இந்தப் பெண்கள் நாள் முழுவதும் சவுக்குத் தோப்பில் செத்தை அரிக்கிறார்கள்’
வினைச்சொல்
- 1
சொறியத் தூண்டும் உணர்வு உண்டாதல்; நமைச்சல் ஏற்படுதல்.
‘கம்பளிச் சட்டை போட்டால் உடம்பெல்லாம் அரிக்கத் தொடங்கிவிடுகிறது’
பெயர்ச்சொல்
- 1
வயலில் அறுத்துப் போடப்பட்டிருக்கும் நெற்கதிர்களின் தொகுதி.