தமிழ் அரிது யின் அர்த்தம்

அரிது

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  எப்போதாவது ஒரு முறை காணக்கூடியது அல்லது நிகழக்கூடியது; அபூர்வம்.

  ‘வால் நட்சத்திரம் அரிதாகத் தோன்றும்’
  ‘அவரை வீட்டில் பார்ப்பது அரிது’

 • 2

  வாய்ப்புக் குறைவு.

  ‘பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பது அரிதாக இருக்கிறது’
  ‘இந்தக் காட்சிகளைத் தவறவிட்டால் பின்னர் பார்ப்பது அரிது’