தமிழ் அருள் யின் அர்த்தம்

அருள்

வினைச்சொல்அருள, அருளி, அருண்டு

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (கருணையுடன்) தருதல்; வழங்குதல்.

  ‘நாம் கேட்பதை இறைவன் நமக்கு அருள்வான் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது’

 • 2

  உயர் வழக்கு (ஆன்மீகம் சார்பானவற்றை) இயற்றுதல்; கூறுதல்.

  ‘முதல் மூன்று திருமுறைகள் ஞானசம்பந்தர் அருளிய தேவாரத் திருப்பதிகங்களாகும்’
  ‘ராமகிருஷ்ணர் அருளிய ஞானமொழிகள்’

தமிழ் அருள் யின் அர்த்தம்

அருள்

துணை வினைஅருள, அருளி, அருண்டு

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (இறைவனாலும் மகான்களாலும் செய்யப்படும்) செயல் அருள்நோக்கத்தைக் கொண்டது என்பதை உணர்த்தும் ஒரு துணை வினை.

  ‘குள்ளனாக வந்த திருமால் விசுவரூபம் காட்டியருளினார்’
  ‘அடிகளார் மணமக்களை வாழ்த்தியருளினார்’

தமிழ் அருள் யின் அர்த்தம்

அருள்

வினைச்சொல்அருள, அருளி, அருண்டு

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு மிரளுதல்.

  ‘குழந்தை எதையோ பார்த்து அருள்கிறது’
  ‘மைமல் நேரத்தில் வெளியே போனவள் எதையோ பார்த்து அருண்டிருக்கிறாள்’

தமிழ் அருள் யின் அர்த்தம்

அருள்

பெயர்ச்சொல்

 • 1

  (இறைவனின்) கருணை.

  ‘இறைவன் அருளால் பிள்ளை இல்லாக் குறை தீர்ந்தது’
  ‘கடவுள் அருளால் விபத்திலிருந்து தப்பினார்’

 • 2

  (பிறருக்கு) நன்மை ஏற்பட வேண்டும் என்னும் எண்ணம்.

  ‘என்னுடைய முன்னேற்றத்துக்கு உங்களுடைய ஆசியும் அருளும் வேண்டும்’