அரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அரை1அரை2அரை3அரை4

அரை1

வினைச்சொல்அரைக்க, அரைத்து, அரைய, அரைந்து

 • 1

  (நீர் கலந்து) நைத்து மாவாக்குதல் அல்லது கூழாக்குதல்.

  ‘இட்லிக்கு மாவு அரைக்க ஆட்டுக்கல் போய் அரவை இயந்திரம் வந்துவிட்டது’
  ‘சட்னிக்கு அம்மியில் தேங்காயை வைத்து அரைத்துக்கொண்டிருந்தாள்’

 • 2

  மெல்லுதல்.

  ‘வாயில் எதையாவது போட்டு அரைத்த வண்ணமாகவே இருக்கிறான்’

 • 3

  (கோதுமை, மிளகாய் போன்றவற்றை) மாவாக்குதல்.

 • 4

  (இயந்திரத்தில் போட்டு நெல்லை) அரிசி ஆக்குதல்.

அரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அரை1அரை2அரை3அரை4

அரை2

வினைச்சொல்அரைக்க, அரைத்து, அரைய, அரைந்து

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (தரையைத் தேய்ப்பதுபோல்) அசைந்து மெதுவாக நகர்தல்.

  ‘குழந்தை நெஞ்சால் அரைந்து அரைந்து வந்தது’

அரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அரை1அரை2அரை3அரை4

அரை3

பெயர்ச்சொல்

 • 1

  ஒன்று என்னும் எண்ணின் பாதி.

 • 2

  (அளவிடப்படும், கணக்கிடப்படும் பொருளில்) சரிபாதி.

  ‘அரை மூட்டை அரிசி’
  ‘அரை மணி நேரம்’
  ‘அரை நூற்றாண்டு’

 • 3

  (அளவைகளால் கணக்கிடப்படாதவற்றில்) முழுமையாக இல்லாதது.

  ‘அரை தோசை’
  ‘அரைத் தூக்கம்’
  ‘அரை வயிறுகூட நிரம்பவில்லை’

அரை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அரை1அரை2அரை3அரை4

அரை4

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு இடுப்பு.

  ‘அரையிலிருந்து வேட்டி நழுவுவதுகூடத் தெரியாத அளவுக்குக் குடித்திருந்தான்’