தமிழ் அரைகுறை யின் அர்த்தம்

அரைகுறை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒன்றின்) முழுமையற்ற அல்லது முடிவு பெறாத நிலை.

  ‘புத்தகம் வெளிவராமல் அரைகுறையாகக் கிடக்கிறது’
  ‘அரைகுறைத் தூக்கக் கலக்கத்தில் இருந்தான்’
  ‘அரைகுறை வேலை எனக்குப் பிடிக்காது’

 • 2

  (ஒன்றைச் செய்வதில்) முழு மனத்தோடு ஈடுபடாத நிலை.

  ‘அரைகுறையான மனத்துடன் எந்தக் காரியத்தையும் செய்யாதே’

 • 3

  (ஒன்றில்) குறைவான தேர்ச்சி.

  ‘சங்கீதத்தில் அவன் ஒரு அரைகுறை’
  ‘அரைகுறைப் படிப்பு எதற்கும் உதவாது’
  ‘அவர் அரைகுறை ஆங்கிலத்தில் பேசினார்’

 • 4

  (காதால் கேட்பதைக் குறித்து வரும்போது) முழுமையாகச் செவிப் புலனுக்கு எட்டாதது.

  ‘நான் அரைகுறையாகக் கேட்டதையே உனக்குச் சொல்கிறேன்’