தமிழ் அரைவயிறு யின் அர்த்தம்

அரைவயிறு

பெயர்ச்சொல்

  • 1

    (உணவு) பசியை ஓரளவுக்கு மட்டும் போக்கும் அளவுக்கானது.

    ‘இந்தச் சாப்பாடு அரைவயிற்றுக்குக்கூடக் காணாது’
    ‘அரை வயிற்றுக் கஞ்சிக்கே நாள் முழுதும் உழைக்க வேண்டியிருக்கிறது’
    ‘அரைவயிறு உணவுகூடக் கிடைக்காமல் வாடிய நாட்களும் உண்டு’