தமிழ் அரைவேக்காடு யின் அர்த்தம்

அரைவேக்காடு

பெயர்ச்சொல்

 • 1

  (காய்கறி, முட்டை முதலியன) பாதி வெந்தும் வேகாமலும் இருக்கும் நிலை.

  ‘முட்டையை அரைவேக்காட்டில் எடுத்துவிடு’

 • 2

  அரைகுறையாகத் தெரிந்திருப்பது.

  ‘அரைவேக்காட்டுக் கூற்றுக்குப் பதில் சொல்ல முடியாது’

 • 3

  (ஒன்றைப் பற்றி) அரைகுறையாகத் தெரிந்துவைத்திருப்பவர்; உரிய பக்குவம் அல்லது முதிர்ச்சி இல்லாத நபர்.

  ‘இந்த அரைவேக்காடு சொன்ன யோசனையைக் கேட்டு வியாபாரத்தில் இறங்கலாமா?’
  ‘அரைவேக்காடுகளால் கட்சிக்குக் கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது’