தமிழ் அரை டிக்கெட் யின் அர்த்தம்

அரை டிக்கெட்

பெயர்ச்சொல்

 • 1

  (12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்குச் சலுகையாக) பாதிக் கட்டணம் செலுத்தும் பயணச்சீட்டு.

  ‘ஊருக்குப் போவதற்கு இரண்டு அரை டிக்கெட் இரண்டு முழு டிக்கெட் எடுக்க வேண்டும்’
  ‘குழந்தைகளுக்கு மூன்று வயது ஆகிவிட்டால் அரை டிக்கெட் எடுக்க வேண்டும்’

 • 2

  பேச்சு வழக்கு (கேலியாகக் குறிப்பிடும்போது) சிறுவன் அல்லது சிறுமி.

  ‘கல்யாண வீட்டில் அரை டிக்கெட்டுகளின் லூட்டி தாங்க முடியவில்லை’