தமிழ் அற்பம் யின் அர்த்தம்

அற்பம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  கேவலம்; கீழ்த்தரம்; மட்டம்.

  ‘இதைக் கேட்பதற்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதுபோல் என்னை அற்பமாகப் பார்த்தார்’

 • 2

  (கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு) சிறியது; முக்கியத்துவமற்றது; சாதாரணம்.

  ‘அற்ப விஷயங்களுக்கெல்லாம் கோபித்துக்கொள்ளக்கூடாது’
  ‘ஐந்தாம் வகுப்பு வரையாவது படித்திருக்கிறோமே என்பதில் அவனுக்கு அற்ப சந்தோஷம்’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு (மிகவும்) குறைவு; கொஞ்சம்.

  ‘கோயிலில் பொங்கல் அற்பமாகத்தான் கிடைத்தது’
  ‘மதியம் அற்பமாகத்தான் உண்டேன்’