தமிழ் அற்புதம் யின் அர்த்தம்

அற்புதம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  வியப்பைத் தரும் வகையில் சிறப்பானது.

  ‘தூரத்தில் மலைத்தொடர் அற்புத அழகுடன் காட்சி அளித்தது’
  ‘அற்புதமான கவிதை’
  ‘சிறுவன் அற்புதமாகப் பாடினான்’

 • 2

  அறிவியலின் விதிகளால் விளக்கப்பட முடியாத நிகழ்ச்சி.

  ‘சித்தர்கள் பல அற்புதங்களை நிகழ்த்தியதாகப் படிக்கிறோம்’
  ‘முடவனை நடக்கச் செய்த அற்புதம்’

 • 3

  அருகிவரும் வழக்கு சாகசம்.

  ‘கயிற்று ஏணியில் ஒரு பெண் பல அற்புதங்கள் செய்துகாட்டினாள்’