தமிழ் அறவே யின் அர்த்தம்

அறவே

வினையடை

 • 1

  முற்றிலும்; முழுவதும்/(எதிர்மறை வினைகளோடு) சிறிதளவுகூட.

  ‘ஏரியில் தண்ணீர் அறவே வற்றிப்போய்விட்டது’
  ‘குழந்தை பொம்மை வாங்கிவரச் சொன்னதை அறவே மறந்துவிட்டேன்’
  ‘எனக்குப் பாகற்காய் அறவே பிடிக்காது’
  ‘கவலை என்பது அறவே இல்லாத குழந்தைகள்’