தமிழ் அறிக்கை யின் அர்த்தம்

அறிக்கை

பெயர்ச்சொல்

 • 1

  (நிகழ்ச்சிகளின், நடவடிக்கைகளின்) தகவல் தொகுப்பு.

  ‘இந்த வருட ஆண்டறிக்கையில்தான் லாபம் காட்டப்பட்டிருக்கிறது’
  ‘நான் இரவு ஒன்பது மணிக்கு ஒலிபரப்பாகும் ஆங்கிலச் செய்தி அறிக்கையைக் கேட்கத் தவறுவதில்லை’

 • 2

  (எழுத்து வடிவ) வேண்டுகோள்.

  ‘நிதி திரட்டுவதற்காக அவர் ஓர் அறிக்கை விட்டிருக்கிறார்’

 • 3

  அறிவிப்பு.

  ‘1934ஆம் ஆண்டு பகுத்தறிவு இதழ் ஒன்றில் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய அறிக்கை ஒன்று வெளிவந்தது’
  ‘புதிய கட்சி தொடங்கப்போவதாக அவர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்’

 • 4

  (ஒரு நிலைமையைக் குறித்த) முறையான விளக்கம் அல்லது ஆய்வின் அடிப்படையில் கண்டறிந்து வெளிப்படுத்தப்பட்டது.

  ‘பாரிஸ் மாநாடு முறிந்ததற்குக் காரணம் என்ன என்பது பற்றித் தலைவர்கள் அறிக்கைகள் வெளியிட்டனர்’
  ‘இந்தக் குழுவின் அறிக்கைமீது அரசாங்கம் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’