தமிழ் அறிகுறி யின் அர்த்தம்

அறிகுறி

பெயர்ச்சொல்

 • 1

  இருப்பதையோ நிகழ்ந்ததையோ வர இருப்பதையோ (ஊகித்து) தெரிந்துகொள்ள உதவும் குறிப்பு; அடையாளம்.

  ‘அவருடைய கோபம் பலவீனத்தின் அறிகுறி’
  ‘வண்டி நிற்பதற்கான அறிகுறியாக வேகம் குறைந்தது’

 • 2

  உடல்நலக் குறைவின் அடையாளமாக ஒருவர் உணர்வது/நோயாளியிடம் பரிசோதனை மூலம் மருத்துவர் நோயின் தன்மைகளாகக் கண்டறிவது.

  ‘இருமல் காச நோயின் அறிகுறியாக இருக்கலாம்’
  ‘கல்லீரல் வீக்கம், காய்ச்சல் போன்றவை நோய்க்கான அறிகுறிகள்’