தமிழ் அறியாமல் யின் அர்த்தம்

அறியாமல்

வினையடை

  • 1

    ஒருவர் தான் செய்யும் காரியம் இன்னது என்று தெரியாமல்; தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல்; அனிச்சையாக.

    ‘அவளை அறியாமல் அவள் உள்ளம் அவரை நாடியது’
    ‘அவருடைய கம்பீரமான தோற்றத்தைப் பார்த்ததும் எங்களை அறியாமல் நாங்கள் அனைவரும் எழுந்து நின்றோம்’
    ‘என்னை அறியாமல் கொட்டாவி வந்துவிட்டது’