தமிழ் அறிவிப்பு யின் அர்த்தம்

அறிவிப்பு

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு செய்தியை அனைவரும் அறியும்படி தெரிவிக்கும் செயல்.

  ‘ஒலிபெருக்கியில் வண்டி தாமதமாக வரும் என்னும் அறிவிப்பு கேட்கத் தொடங்கியது’
  ‘தேர்தல் அறிவிப்பு நாளை வெளியாகும்’
  ‘தேர்வு முடிவுகள் பற்றிய அறிவிப்பை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்’

 • 2

  அறிவிக்கை.

  ‘மதுரை மேற்குத் தொகுதியின் தேர்தல் அட்டவணை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது’