தமிழ் அறிவு யின் அர்த்தம்

அறிவு

பெயர்ச்சொல்

 • 1

  அனுபவம், சிந்தனை, கல்வி போன்றவற்றின் மூலமாகப் பெற்றுத் தெரிந்துவைத்திருப்பது.

  ‘கேள்வி அறிவு’
  ‘இத்தனை பேரிடம் ஏமாந்தும் உனக்கு அறிவு வரவில்லை’

 • 2

  ஒரு துறையைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் புலமை; விஷய ஞானம்.

  ‘அரசியல் அறிவு’
  ‘விஞ்ஞான அறிவை வளர்த்துக்கொள்ளப் பல நூல்கள் உள்ளன’