அறுதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அறுதி1அறுதி2

அறுதி1

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (மாற்ற முடியாத) முடிவு; இறுதி.

  ‘ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பே அறுதியானது’

அறுதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அறுதி1அறுதி2

அறுதி2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (நிலம், வீடு போன்றவற்றை) குறிப்பிட்ட காலத்தில் மீட்டுக்கொள்வதாகக் கூறி வைக்கும் அடமானம்.

  ‘இந்த வீட்டை இரண்டு வருட அறுதியாக அவருக்கு எழுதிக்கொடுத்துள்ளேன்’
  ‘அறுதி மீட்காததனால் நிலம் ஏலத்தில் போய்விட்டது’