வினைச்சொல்
- 1
(மனிதர்கள் விரித்த கையாலும் விலங்குகள் முன்னங்காலாலும் ஒரு பரப்பில்) வேகத்துடன் தாக்குதல்.
‘பேசிக்கொண்டிருக்கும்போதே பளாரென்று கன்னத்தில் அறைந்துவிட்டான்’‘புலி அறைந்து செத்துப்போனான்’ - 2
(ஆணி, முளை போன்றவற்றை) உட்செலுத்துதல்.
‘ஒரு முளை அறைந்து மாட்டைக் கட்டு’ - 3
(சாந்துக் கலவையைச் சுவரின் மேல் பிடித்துக்கொள்ளுமாறு) வேகத்துடன் அப்புதல்.
‘கலவையை நன்றாக அறைந்து பூசு’ - 4
(பிசைந்த மாவை மென்மையாக்குவதற்காகக் கல், பலகை முதலியவற்றின் மீது) வேகத்துடன் எறிதல்.
‘பூரி மாவை அறைந்து பிசை’
பெயர்ச்சொல்
- 1
(மனிதர்கள் விரித்த கையாலும் விலங்குகள் முன்னங்காலாலும் ஒரு பரப்பில்) வேகத்துடன் கொடுக்கும் அடி.
‘முதுகில் பலமாக ஓர் அறை விழுந்தது’‘புலி ஒரே அறையில் மானை வீழ்த்தியது’
பெயர்ச்சொல்
- 1
வீட்டின் அல்லது கட்டடத்தின் உட்பகுதியில் சுவர், கதவு, ஜன்னல் முதலியன வைத்துத் தனித்தனியாகத் தடுக்கப்படும் இடம்.
- 2
(இயந்திரம், அலமாரி போன்றவற்றின் உள்ளே) ஒரு புறம் திறந்திருக்கும் தடுப்பு.
‘கைத்துப்பாக்கியில் தோட்டாக்கள் போடுவதற்கு ஆறு அறைகள் உண்டு’‘இந்த அலமாரியின் மேல் பகுதியில் இரண்டு அறைகள் உண்டு’ - 3
உயிரியல்
(உறுப்புகள், பாகங்கள் ஆகியவற்றில்) நான்கு புறமும் மூடப்பட்டு இருக்கும் பகுதி.‘நுரையீரலில் எண்ணற்ற காற்று அறைகள் உள்ளன’‘இருதயம் நான்கு அறைகள் கொண்டது’