தமிழ் அறைகூவல் யின் அர்த்தம்

அறைகூவல்

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (பொதுநலனுக்கு) ஒத்துழைக்குமாறு விடுக்கப்படும் அழைப்பு.

    ‘தொழிலாளர்கள் அனைவரும் காலவரையறையற்ற வேலைநிறுத்தம் செய்யுமாறு தொழிற்சங்கம் அறைகூவல் விடுத்தது’

  • 2

    உயர் வழக்கு (திறமையை நிரூபிக்குமாறு விடுக்கப்படும்) சவால்.

    ‘குத்துச்சண்டை வீரரின் அறைகூவலில் தன்னடக்கம் சிறிதும் இல்லை’