தமிழ் அறைகூவு யின் அர்த்தம்

அறைகூவு

வினைச்சொல்-கூவ, -கூவி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஒரு செயலைச் செய்யுமாறு அல்லது பொதுநலனுக்கு ஒத்துழைக்குமாறு) அழைப்பு விடுத்தல்.

    ‘‘எல்லா நாட்டின் தொழிலாளர்களும் ஒன்றுபடுக’ என அறைகூவினார்’

  • 2

    உயர் வழக்கு சவால் விடுதல்.

    ‘கர்ணன் அறைகூவியதைக் கேட்டு அர்ச்சுனனுக்குக் கோபம் பொங்கியது’