அலகு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அலகு1அலகு2

அலகு1

பெயர்ச்சொல்

 • 1

  பறவை இரையை அல்லது உணவைத் தின்பதற்கு ஏற்ற வகையில் நீண்டோ கூர்மையாகவோ அதற்கு இருக்கும் உறுப்பு.

  ‘மரங்கொத்தி தனது அலகால் மரத்தைக் கொத்திப் பூச்சிகளைப் பிடித்து உண்ணும்’

 • 2

  தெய்வத்துக்கு நேர்ந்துகொண்ட முறைப்படி நாக்கிலோ உதட்டிலோ முதுகிலோ குத்திக்கொள்ளும் கூரிய கம்பி, கொக்கி போன்றவை.

 • 3

  வெட்டவோ செதுக்கவோ பயன்படும் சாதனங்களில் இருக்கும் இரும்பால் ஆன பட்டையான பகுதி.

  ‘கொலையுண்டவரின் வயிற்றுக்குள் கத்தியின் அலகு முழுவதும் இறங்கியிருந்தது’
  ‘இழைப் புளியின் அலகைத் தட்டிச் சரிசெய்தார்’

அலகு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அலகு1அலகு2

அலகு2

பெயர்ச்சொல்

 • 1

  (அளவைகளின்) அடிப்படை அளவு.

  ‘பாகை என்ற அலகால் கோணத்தை அளக்கிறோம்’
  ‘வானவியலில் இரு விண்பொருள்களுக்கு இடையே உள்ள பெரும் தொலைவைக் குறிப்பிட ஒளியாண்டை அலகாகக் கொள்கிறோம்’
  ‘மருந்துகளை அளவிடும்போது ஒரு கிராம் என்பது பதினாறு லட்சம் அலகுகள் கொண்டதாகக் கணக்கிடப்படுகிறது’
  ‘பூமியின் மையத்திற்கும் சூரியனின் மையத்திற்கும் இடைப்பட்ட 14.86 கோடி கிலோமீட்டர் தூரம் ஒரு வானவியல் அலகு என்று கொள்ளப்படுகிறது’
  ‘நிலநடுக்கங்களை ரிக்டர் அளவுகோலில் அலகுகளாகக் கணக்கிடுகிறார்கள்’

 • 2

  (அளவை அல்லாத பிறவற்றில்) ஆய்விற்கு மிகக் குறைந்த அடிப்படையாக ஏற்படுத்திக்கொள்வது.

  ‘யாப்பிலக்கணத்தில் அசை ஓர் அலகாகக் கொள்ளப்படுகிறது’

 • 3

  முழுமையின் ஒரு கூறாக இருப்பது.

  ‘குடும்பம் என்பது சமூகத்தின் ஓர் அடிப்படை அலகு’
  ‘மரபுவழிப் பண்புகளைத் தன்னுள் கொண்டிருக்கும் அலகு மரபணு ஆகும்’

 • 4

  (நிர்வாகத்தில் அல்லது ஓர் அமைப்பில்) பிரிவு.

  ‘எழுத்துத் தேர்வில் தேறியவர்களுக்கு எந்தெந்த அலகுகள் ஒதுக்கப்படும் என்பது நாளைதான் தெரியும்’

 • 5

  (பாடப் புத்தகங்களில்) பிரிவு.

  ‘இந்த அலகில் எண்ணியலைப் பற்றி விளக்கப்பட்டிருக்கிறது’