தமிழ் அலங்கமலங்க யின் அர்த்தம்

அலங்கமலங்க

வினையடை

  • 1

    (பெரும்பாலும் ‘விழி’, ‘பார்’ போன்ற வினைகளோடு) பயத்தாலோ குழப்பத்தாலோ பாதிக்கப்பட்டு என்ன செய்வதென்று புரியாமல்; ஒன்றும் புரியாமல்; திருதிருவென்று.

    ‘தூங்கிக்கொண்டிருந்தவனைத் தட்டியெழுப்பியதும் கண்விழித்து அலங்கமலங்கப் பார்த்தான்’
    ‘பணத்தைத் தொலைத்துவிட்டு அலங்கமலங்கத் தெருவில் நின்றுகொண்டிருந்தான்’