தமிழ் அலங்கரி யின் அர்த்தம்

அலங்கரி

வினைச்சொல்அலங்கரிக்க, அலங்கரித்து

 • 1

  (ஒருவரை அல்லது ஒன்றை) அழகுபடுத்துதல்.

  ‘பொருட்காட்சி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது’
  ‘மணப்பெண்ணின் முடியை அழகாக அலங்கரித்திருந்தார்கள்’

 • 2

  உயர் வழக்கு (உறுப்பினராக இருந்து அல்லது விருந்தினராக வருகைதந்து ஓர் அமைப்பை) பெருமைப்படுத்துதல்.

  ‘மதுரைத் தமிழ்ச் சங்கத்தைப் பல அறிஞர்கள் அலங்கரித்திருந்தனர்’