தமிழ் அலங்காரம் யின் அர்த்தம்

அலங்காரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  அலங்கரிக்கப்பட்ட நிலை; ஒப்பனை.

  ‘நடிகை எளிமையான அலங்காரத்துடன் வந்திருந்தார்’
  ‘கோயிலில் அம்மனுக்கு அலங்காரம்’
  ‘மாநாட்டிற்கு ஊரெங்கும் அலங்கார வளைவுகள்’

 • 2

  (இலக்கிய நடையில் அவசியமான கூறுகளைத் தவிர்த்த) வெறும் கவர்ச்சி.

  ‘கட்டுரையை அவர் அலங்கார நடையில் எழுதியிருந்தார்’

 • 3

  இலக்கணம்
  (செய்யுள்) அணி.

 • 4

  இசைத்துறை
  ஏழு ஸ்வரங்களைக் கொண்டு அடிப்படையான ஏழு தாளங்களில் பாடப்படும் அல்லது வாசிக்கப்படும் ஆரம்ப இசைப் பயிற்சி.