தமிழ் அலசு யின் அர்த்தம்

அலசு

வினைச்சொல்அலச, அலசி

 • 1

  (அழுக்கு நீங்குவதற்காகத் துணி, பாத்திரம் போன்றவற்றை நீரில்) முக்கி ஆட்டி எடுத்தல்; (ஒரு பரப்பை) நீரால் கழுவுதல்.

  ‘சேலையை ஊறவைத்திருக்கிறேன். அதை அலசிப் பிழிந்து காயப்போடு’
  ‘குழாயைத் திறந்துவிட்டு நீரில் தட்டை அலசினாள்’
  ‘கடைசியாக வாசலை அலசிவிடு’

 • 2

  (ஒரு விஷயத்தின்) எல்லா அம்சங்களையும் விவாதித்தல்.

  ‘இந்தத் திட்டத்தின் பயன்களைப் பற்றி அதிகாரிகள் அலசி ஆராய்ந்தார்கள்’

 • 3

  (ஓர் இடத்தை அல்லது பொருளை) துருவித்துருவிப் பார்த்தல்; ஆராய்தல்.

  ‘அவன் கண்கள் வீட்டின் ஒவ்வொரு மூலையையும் பொருள்களையும் அலசின’