தமிழ் அலட்சியம் யின் அர்த்தம்

அலட்சியம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  அக்கறையின்மை; பொருட்படுத்தாத போக்கு; உதாசீனம்.

  ‘முகத்தில் கர்வம், கண்களில் அலட்சியம்’
  ‘இனி அவன் படிப்பு விஷயத்தில் அலட்சியமாக இருப்பதற்கில்லை’

 • 2

  மதிக்காமல் இருக்கும் தன்மை; அவமரியாதை.

  ‘‘அவர் என்ன அவ்வளவு பெரிய மனிதரா?’ என்றாள் அலட்சியமாக’
  ‘அவர் வேண்டுமென்றே அலட்சியத்துடன் நடந்துகொண்டார்’