தமிழ் அலறு யின் அர்த்தம்

அலறு

வினைச்சொல்அலற, அலறி

 • 1

  (பயம், வலி முதலியவற்றால்) கூக்குரலிடுதல்.

  ‘வயிற்றுவலி தாங்காமல் அலறத் தொடங்கினான்’
  ‘பேயைக் கண்டதுபோல் அலறினாள்’
  உரு வழக்கு ‘தண்ணீர்த் தட்டுப்பாடுபற்றி வானொலியில் அலறுகிறார்கள்’

 • 2

  (காதைத் துளைக்கும்படியாக) ஒலித்தல்.

  ‘தொலைபேசி அலறியது’
  ‘தீப் பிடித்ததும் தொழிற்சாலையின் எச்சரிக்கை மணிகள் அலறின’

 • 3

  (ஆந்தை) கரகரப்பான குரலில் உரக்கக் கத்துதல்.