தமிழ் அல்லல்படு யின் அர்த்தம்

அல்லல்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    சிரமத்துக்கு உள்ளாதல்.

    ‘இந்த வயதுக்கு மேல் என்னால் அல்லல்பட முடியாது’
    ‘நீ ஊருக்கு வந்து எனக்கு உதவியாக இருந்தாலே போதும். ஏன் வேலை தேடி வெளியூரில் அல்லல்படுகிறாய்?’
    ‘எப்படியோ அல்லல்பட்டு ஊர் போய்ச் சேர்ந்தோம்’