தமிழ் அலாதி யின் அர்த்தம்

அலாதி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  தனித்தன்மை கொண்டது; வித்தியாசமானது; சிறப்பானது.

  ‘நீ அமைச்சராக இருந்திருந்தால் வரவேற்பே அலாதியாக இருந்திருக்கும்’
  ‘அவருக்கு உன்மீது அலாதிப் பிரியம்’
  ‘எதிலுமே சேராமல் அலாதியாக ஒலித்தது கோயில் மேளம்’
  ‘அவன் போக்கே அலாதி’