தமிழ் அலுப்பு யின் அர்த்தம்

அலுப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  சலிப்பு; ஆர்வக் குறைவு.

  ‘ஒவ்வொன்றையும் திரும்பத்திரும்பச் சொல்லியாக வேண்டும் என்றால் அலுப்பாகத்தான் இருக்கும்’
  ‘தினமும் இட்லி சாப்பிட்டுச்சாப்பிட்டு அலுப்புதட்டிவிட்டது’

 • 2

  களைப்பு; சோர்வு.

  ‘பயண அலுப்பினால் படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியவில்லை’