தமிழ் அலைக்கழி யின் அர்த்தம்

அலைக்கழி

வினைச்சொல்அலைக்கழிய, அலைக்கழிந்து, அலைக்கழிக்க, அலைக்கழித்து

 • 1

  (பிரச்சினைகளால்) இழுபட்டுத் துன்புறுதல்.

  ‘குடும்ப விவகாரங்களில் மாட்டிக்கொண்டு அவர் அலைக்கழிகிறார்’

 • 2

  (ஒரு இடத்தில் இருக்க முடியாமல்) இழுபடுதல்.

  ‘என் கணவருக்கு நிரந்தர வேலை கிடைக்காததால் நானும் அவரோடு ஊர்ஊராக அலைக்கழிந்துகொண்டிருக்கிறேன்’
  ‘ஆகாயத்துக்கும் பூமிக்குமாக அலைக்கழிந்துகொண்டிருப்பது போன்ற பிரமை’

தமிழ் அலைக்கழி யின் அர்த்தம்

அலைக்கழி

வினைச்சொல்அலைக்கழிய, அலைக்கழிந்து, அலைக்கழிக்க, அலைக்கழித்து

 • 1

  (சமாளிக்க முடியாமல்) தத்தளிக்கச் செய்தல்.

  ‘கொரில்லாப் போர் பெரும் படையையும் அலைக்கழித்துவிடும்’
  ‘பெரியவரை அலைக்கழிக்காமல் கேட்டதைக் கொடுத்து அனுப்பு’