தமிழ் அலைக்கழிப்பு யின் அர்த்தம்

அலைக்கழிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (அலைச்சல், மன வேதனை, முடிவெடுக்க இயலாத சிக்கல் போன்றவற்றால் நேரும்) துன்பம்; சிரமம்.

    ‘உன் நண்பன் வேலை வாங்கித் தருகிறேன் என்று சொன்னதை நம்பிச் சென்னைக்கு வந்ததற்கு அலைக்கழிப்புதான் மிச்சம்’
    ‘அவரிடம் பணம் கிடைக்காது என்பது முன்பே தெரிந்திருந்தால் இந்த அலைக்கழிப்பைத் தவிர்த்திருக்கலாம்’
    ‘உடல்நலக் கோளாறுடன் அலைக்கழிப்பும் சேர்ந்து அவரைப் படுக்கையில் தள்ளிவிட்டது’