தமிழ் அலைச்சல் யின் அர்த்தம்

அலைச்சல்

பெயர்ச்சொல்

 • 1

  (பல இடங்களுக்கும்) அலைவதால் ஏற்படும் சிரமம்.

  ‘மதுரைக்குப் போயும் அவரைப் பார்க்க முடியவில்லை; அலைச்சல்தான் மிச்சம்’
  ‘வியாபாரம் காரணமாகப் போன வாரம் முழுவதும் சரியான அலைச்சல்’

 • 2

  (வீணான) நடை.

  ‘குறுக்கு வழியில் போனால் ஒரு கிலோமீட்டர் அலைச்சல் மிச்சம்’