தமிழ் அலைபாய் யின் அர்த்தம்

அலைபாய்

வினைச்சொல்-பாய, -பாய்ந்து

 • 1

  (கூட்டம்) திரண்டு வருதல்.

  ‘இன்று தேர்த் திருவிழா; மக்கள் கூட்டம் அலைபாய்கிறது’

 • 2

  நிலைகொள்ளாமல் தவித்தல்.

  ‘எருமை கட்டியிருந்த தும்போடு கொட்டகையில் அலைபாய்ந்துகொண்டிருந்தது’
  ‘மனத்தை அலைபாய விடாதே!’
  ‘நாலாபக்கமும் கடன் தொல்லை; என்ன செய்வதென்று அலைபாய்ந்துகொண்டிருக்கிறேன்’
  ‘வினாடி நேரத்தில் ஆயிரம் யோசனைகள் அலைபாய்ந்தன’