தமிழ் அலைவரிசை யின் அர்த்தம்

அலைவரிசை

பெயர்ச்சொல்

 • 1

  ஒலிபரப்புக்காகவோ ஒளிபரப்புக்காகவோ ஒரு வினாடிக்கு இத்தனை என்னும் முறையில் அனுப்பும் மின்காந்த அலைகளின் தொடர்/மேற்குறிப்பிட்ட முறையில் ஒலிபரப்பும் அல்லது ஒளிபரப்பும் அமைப்பு.

  ‘நேர்முக வர்ணனை சென்னை இரண்டாவது அலைவரிசையில் ஒளிபரப்பாகும்’
  ‘தொலைக்காட்சி அலைவரிசைகள் ஓயாமல் திரைப்படத்தைப் பற்றிய நிகழ்ச்சிகளையே ஒளிபரப்புகின்றன’

 • 2

  (இருவரிடையே காணப்படும்) சிந்தனையும் உணர்வுகளும்.

  ‘நாங்கள் செய்யும் காரியம் நன்றாக அமைவதற்குக் காரணம் எங்களிடையே காணப்படும் ஒத்த அலைவரிசைதான்’