தமிழ் அள்ளு யின் அர்த்தம்

அள்ளு

வினைச்சொல்அள்ள, அள்ளி

 • 1

  (தானியம், மணல் போன்றவற்றைக் கூடை, கை முதலியவற்றால்) வாரி எடுத்தல்; (தண்ணீரை) முகந்து எடுத்தல்.

  ‘காயவைத்திருந்த நெல்லைக் கூடையாலும் முறத்தாலும் அள்ளி அம்பாரமாகக் குவித்தார்கள்’
  ‘தொழுவத்தில் சாணம் அள்ளப்படாமல் கிடந்தது’
  ‘குளத்தில் தண்ணீர் குடிக்கப் போகிறவர்கள் கையால் அள்ளித்தான் குடிக்க வேண்டும்’

 • 2

  (கூந்தலைக் கையால்) ஒருங்கே சேர்த்தல்.

  ‘அவள் தன் கூந்தலை இரு கையாலும் அள்ளி முடிந்துகொண்டாள்’

 • 3

  (‘அள்ளி’ என்ற வடிவம் மட்டும்) (கையால்) தூக்குதல்/தூக்கிப் பிடித்தல்.

  ‘குழந்தையை அள்ளிக் கொஞ்சினாள்’

 • 4

  (மனத்தை) மிகுந்த அளவில் கவர்தல்.

  ‘சின்னஞ்சிறு குழந்தைகளின் வண்ண உடைகளும் அணிவகுப்பும் மனத்தை அள்ளின’