தமிழ் அளவீடு யின் அர்த்தம்

அளவீடு

பெயர்ச்சொல்

 • 1

  அளவு.

  ‘நம் அன்றாட வாழ்வில் பரப்பு, கனம், நிறை, காலம் போன்றவற்றைக் குறிக்கப் பல அளவீடுகளைப் பயன்படுத்துகிறோம்’
  ‘படத்தின் ஓரத்தில் அளவீடுகள் குறிக்கப்பட்டுள்ளன’

 • 2

  அளவிடும் முறை.

  ‘ஒளி அடர்த்தி லூமன் அளவீடுகளில் அளக்கப்படுகிறது’
  ‘கெல்வின் அளவீடு’