அளவு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அளவு1அளவு2

அளவு1

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  குறிப்பிட்ட அலகை அடிப்படையாகக் கொண்டு ஒன்று குறிப்பிட்ட முறையில் அமைந்திருப்பது.

  ‘திரை தைப்பதற்குத் துணி வாங்கும் முன் ஜன்னலின் அளவைக் குறித்துக்கொள்’
  ‘தொட்டியில் பாதி அளவு தண்ணீர் நிரம்பியிருந்தது’
  ‘சட்டையின் அளவு சற்றுப் பெரியது’
  ‘தாய்ப்பாலில் குழந்தைக்கு வேண்டிய சத்துப்பொருள்கள் சரியான அளவுகளில் உள்ளன’
  ‘பெரிய அளவில் நிதி திரட்ட வேண்டும்’
  ‘இந்த அளவாவது உதவி செய்தானே!’

 • 2

  மிகவும் அதிகம் என்றோ குறைவு என்றோ சொல்ல முடியாத நிலை; கச்சிதம்.

  ‘அளவான குடும்பம்’
  ‘அளவான உணவு’
  ‘அளவாகச் சாப்பிட்டால் அஜீரணம் வராது’
  ‘என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்; ஆனால் அளவோடு செய்யுங்கள்’
  ‘அளவுக்கு அதிகமாகப் பேசாதே’

 • 3

  (உடைகள்) எப்படித் தைக்கப்பட வேண்டுமென்பதற்காகக் கொள்ளப்படும் மாதிரி.

  ‘அளவுச் சட்டை’

அளவு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அளவு1அளவு2

அளவு2

இடைச்சொல்