தமிழ் அளவுக்கு யின் அர்த்தம்

அளவுக்கு

இடைச்சொல்

 • 1

  (பெயரெச்சத்தின் பின் பயன்படுத்தப்படும்போது) ‘கூறப்படும் நிலைக்கு’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘நீ வெட்கப்படும் அளவுக்கு அவன் அப்படி என்ன சொல்லிவிட்டான்?’
  ‘உடம்பு நடுங்கும் அளவுக்குக் குளிர்!’
  ‘பேசிய அளவுக்குக் கூலி தரவில்லை’

 • 2

  ஒருவரோடு ஒருவரை அல்லது ஒன்றோடு ஒன்றை ஒப்பிடும்போது பின்னர் குறிப்பிடப்படுபவருக்கு அல்லது குறிப்பிடப்படுவதற்குச் சமமாகவோ கூடவோ இருக்கிறது என்பதைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘ஊட்டியிலும் கொடைக்கானல் அளவுக்குக் குளிர் உண்டு’
  ‘அவன் அளவுக்கு எனக்குப் பொறுமை இல்லை’