தமிழ் அளவுகோல் யின் அர்த்தம்

அளவுகோல்

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு பொருளின் நீளம், அகலம், உயரம் ஆகியவற்றைக் கணக்கிடுவதற்கான அலகு குறிக்கப்பட்ட கோல்.

 • 2

  ஒரு நிகழ்வின் தீவிரத்தைக் கணக்கிடுவதற்கு உரிய சாதனம் அல்லது அமைப்பு.

  ‘அல்மோரா மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 4.5 எனப் பதிவாகியிருக்கிறது’

 • 3

  (ஒன்றில் காணப்பட வேண்டிய) அடிப்படைத் தரம் மற்றும் தன்மை.

  ‘நல்ல நாவல் என்பதற்கான அளவுகோல் என்ன?’