அளி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அளி1அளி2

அளி1

வினைச்சொல்அளிய, அளிந்து, அளிக்க, அளித்து

 • 1

  (பழம்) அளவுக்கு அதிகமாகக் கனிதல்.

  ‘அளிந்துபோன வாழைப்பழத்தை இவ்வளவு காசு கொடுத்து யாராவது வாங்கிவருவார்களா?’

 • 2

  (சமைக்கும்போது சோறு, காய்கறிகள் போன்றவை) குழைந்துபோதல்.

  ‘தண்ணீர் அதிகம் வைத்தால் சாதம் அளிந்துவிடாதா?’

அளி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அளி1அளி2

அளி2

வினைச்சொல்அளிய, அளிந்து, அளிக்க, அளித்து

 • 1

  வழங்குதல்; கொடுத்தல்.

  ‘தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு அவர் ஆயிரம் ரூபாய் பரிசாக அளித்தார்’
  ‘ஏழைகளுக்கு அரசு இலவச மருத்துவ உதவி அளிக்கும்’