அளை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அளை1அளை2

அளை1

வினைச்சொல்அளைய, அளைந்து

 • 1

  (விரல்களால் அங்குமிங்கும்) ஒதுக்குதல்.

  ‘அவளுக்குப் பசி இல்லை; சாப்பிடாமல் சோற்றை அளைந்துகொண்டிருந்தாள்’
  ‘குழந்தையின் தலைமுடியை வாஞ்சையுடன் அளைந்தவாறு இருந்தாள்’

 • 2

  (ஆறு, குளம் போன்றவற்றின் நீரில்) கைகளையோ கால்களையோ முக்கி அங்குமிங்கும் அசைத்தல்.

  ‘ஆற்றில் இறங்கி அளைந்தவாறே நடக்கத் துவங்கினான்’
  ‘பையன் அலையில் அளைந்துவிட்டு வந்தான்’

அளை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அளை1அளை2

அளை2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு பயிர் நட்டிருக்கும் வயலில் அதிகப்படியாக இருக்கும் நீர் வடிவதற்காக வயலினுள் அமைக்கப்படும் சிறிய வாய்க்கால்.