தமிழ் அழகி யின் அர்த்தம்

அழகி

பெயர்ச்சொல்

 • 1

  அழகிய தோற்றமுடையவள்.

  ‘என் தங்கை நல்ல அழகி’
  ‘இப்படி ஒரு அழகியை நான் பார்த்ததேயில்லை’

 • 2

  போட்டியின் அடிப்படையில் அழகியாகத் தேர்ந்தெடுக்கப்படும் பெண்.

  ‘சில ஆண்டுகளுக்கு முன் ஒரு இந்தியப் பெண் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்’