தமிழ் அழகு யின் அர்த்தம்

அழகு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  கண்ணாலோ காதாலோ மனத்தாலோ அனுபவிக்கும் இனிமை அல்லது மகிழ்ச்சி.

  ‘கண்ணனின் வேணுகானமும் ராதையின் அழகும் கோபியரின் உள்ளங்களைக் கொள்ளைகொண்டன’
  ‘குழந்தை மிக அழகாகப் பாடுகிறது’
  ‘எழுத்து மட்டும் அல்ல, கருத்தும் அழகாகத்தான் இருக்கிறது’

 • 2

  பொருத்தமான குணம்; தகுதியான தன்மை.

  ‘வயதான காலத்தில் பெற்றோருக்கு உதவுவதுதான் பிள்ளைகளுக்கு அழகு’
  ‘உங்களைப் போன்ற பெரிய மனிதர்கள் இப்படிப் பேசுவது அழகல்ல’

 • 3

  (ஒரு செயல்பாட்டில்) ஒழுங்கு நிறைந்த தன்மை.

  ‘அவன் வேலை செய்கிற அழகைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்’