அழி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அழி1அழி2அழி3

அழி1

வினைச்சொல்அழிய, அழிந்து, அழிக்க, அழித்து

 • 1

  இயற்கையில் இருப்பது, இயல்பாக இருப்பது போன்றவை இல்லாமல் போதல் அல்லது குறைதல்.

  ‘சில வகை உயிரினங்கள் அழிந்துவருகின்றன’
  ‘உடல் அழியும், புகழ் அழியாது’
  ‘திரைப்பட மோகத்தால் அழிந்துபோன குடும்பங்கள் பல’

 • 2

  (இயற்கையின் சீற்றம், ஆயுதத் தாக்குதல் போன்றவற்றால் கட்டடம் போன்றவை) நாசமாதல்.

  ‘இந்தக் கட்டடம் மட்டும் குண்டு வீச்சில் அழியாமல் தப்பியது’
  ‘அண்மையில் நிகழ்ந்த பூகம்பத்தால் குஜராத் மாநிலத்தில் ஒரு கிராமமே அழிந்தது’
  ‘இமாச்சலப் பிரதேசத்தில் கடும் மழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் இருநூறு வீடுகள் அழிந்தன’

 • 3

  (எழுத்து, ஓவியம் போன்றவை) உருவம் இழத்தல்.

  ‘தண்ணீர் பட்டுக் கோலம் சற்று அழிந்திருந்தது’
  ‘வியர்வையில் குங்குமம் அழிந்துவிட்டிருந்தது’

அழி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அழி1அழி2அழி3

அழி2

வினைச்சொல்அழிய, அழிந்து, அழிக்க, அழித்து

 • 1

  இயற்கையில் இருப்பதை இல்லாமல் செய்தல் அல்லது ஒன்றின் இயல்பைக் குலைத்தல்.

  ‘மக்களை அழிக்கும் அணு ஆயுதங்கள் தடைசெய்யப்பட வேண்டும்’
  ‘காட்டை அழித்து விளைநிலம் ஆக்கிவிட்டோம்’
  ‘குற்றம் புரிந்தவர்கள் எல்லாத் தடயங்களையும் அழித்துவிட்டார்கள்’
  உரு வழக்கு ‘உன் மனத்தில் இருக்கும் மோசமான எண்ணத்தை அழித்துவிடு’

 • 2

  விற்றல்.

  ‘என் சொத்தையெல்லாம் அழித்து இந்தப் படத்தை எடுத்தேன்’
  ‘என் காட்டை அழித்து உன்னைப் படிக்க வைத்தேனே!’

 • 3

  (ஒரு வடிவத்தில் இருக்கும் பொருளை மற்றொரு வடிவத்துக்கு மாற்ற) உருச்சிதைத்தல்.

  ‘இந்த மோதிரங்களை அழித்தால் ஒரு வளையல் செய்ய முடியுமா?’
  ‘களிமண்ணால் பொம்மை செய்வது, அழிப்பது, மறுபடியும் செய்வது எல்லாம் சுலபம்’

அழி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அழி1அழி2அழி3

அழி3

பெயர்ச்சொல்

 • 1

  மரச்சட்டம், கம்பி போன்றவற்றால் செய்யப்பட்ட தடுப்பு.

  ‘அழி பாய்ச்சிய திண்ணை’