தமிழ் அழு யின் அர்த்தம்

அழு

வினைச்சொல்அழ, அழுது

 • 1

  (துன்பம், வலி, பசி முதலியவற்றால்) கண்ணீர் விடுதல்.

  ‘குழந்தை பசியால் அழுகிறதா, வயிற்றுவலியால் அழுகிறதா?’

 • 2

  (பயனற்ற ஒன்றை விடாமல் வைத்துக்கொண்டு) துன்பப்படுதல்.

  ‘ஏன் இந்தப் பழைய மிதிவண்டியைக் கட்டிக்கொண்டு அழுகிறாய்?’
  ‘மரபு என்ற பெயரால் காலத்துக்கு ஒவ்வாத சில கருத்துக்களை வைத்துக்கொண்டு அழுகிறோம்’

 • 3

  (தவிர்க்க முடியாமல், கட்டாயத்துக்கு உட்பட்டு) வேண்டாவெறுப்பாகக் கொடுத்தல்.

  ‘வேறு வழியில்லாமல் அலுவலக ஊழியருக்குப் பத்து ரூபாய் அழுதேன்; காரியம் முடிந்தது’

 • 4

  (எதிர்மறைத் தொனியில்) (பொருட்டாக மதித்து) கவலைப்படுதல்; விரும்புதல்.

  ‘நீ அமைச்சராக வேண்டும் என்று யார் அழுகிறார்கள்?’
  ‘நீ கல்யாணத்திற்கு வரவில்லை என்று யார் அழுதார்கள்?’
  ‘நீ என்னுடன் வர வேண்டும் என்று அழுதேனா?’