தமிழ் அவசரப்படு யின் அர்த்தம்

அவசரப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

 • 1

  (ஒன்றைச் செய்வதில் தேவை இல்லாமல்) வேகம்காட்டுதல்; பரபரப்புடன் நடந்துகொள்ளுதல்.

  ‘நிதானமாகச் செய்திருக்கலாம், அவசரப்பட்டுவிட்டேன்’
  ‘அவசரப்பட்டு ஒரு தீர்மானத்துக்கு வந்துவிடாதீர்கள்!’
  ‘எதற்கு இப்படி அவசரப்படுகிறாய்? சற்றுப் பொறுமையாக இரு’
  ‘அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்து விடாதே’